எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய பெண் ஒருவர் குள்ளமான தனது 9 வயது மகன் அழுது கொண்டே தனது வேதனையை கூறும் மனதை உருக்கும் வீடியோ ஒன்றை முகநூலில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸ் என்ற அந்தப் பெண் கடந்த புதன்கிழமை தனது 9 வயது மகன் குவாடனை பள்ளியில் இருந்து காரில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். முகநூல் வீடியோவில் குள்ளமாக தோற்றமளிக்கும் அச்சிறுவன் தனது பள்ளிச் சீருடையில் கார் இருக்கையில் சாய்ந்து கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான். எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்று விட வேண்டும் என விரும்புகிறேன் என தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுகிறான். அச்சிறுவன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பேல்ஸ் தனது பதிவில், குவாடனின் உயரத்தை கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பள்ளியில் புகார் செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கி விட்டான். ஒரு தாயாக எனது பொறுப் பிலிருந்து நான் தவறி விட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதுகிறேன் என்கிறார். மேலும் சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று பிற பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. ஒரு கோடியே 50 லட்சம் முறைக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. சிறுவனுக்கும் அவன் தாயாருக்கும் ஆஸ்திரேலிய தேசிய ரக்பி லீக் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 31 பேர் உயிரிழப்பு
02 Mar 2026பெய்ரூட், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அ
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் திட்டவட்ட மறுப்பு
02 Mar 2026தெஹ்ரான், ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெர
-
இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு: கண்காணிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது உள்துறை அமைச்சகம்
02 Mar 2026புதுடெல்லி, ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு
-
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி
02 Mar 2026தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
-
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
02 Mar 2026லண்டன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
-
போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரிய தமிழர்கள் 498 பேரும் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்
02 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை
-
ஈரானில் ஐ.ஆர்.ஜி.சி.யின் தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
02 Mar 2026வாஷிங்டன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
-
போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார
-
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்
02 Mar 2026அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
02 Mar 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Mar 2026சென்னை, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு
02 Mar 2026மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.


