ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் சாக்ஷிக்கு வெள்ளிப்பதக்கம்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      விளையாட்டு
sakshi silver 2020 02 22

புதுடெல்லி : டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பந்தயத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் (65 கிலோ பிரிவு), ஜப்பானின் நவோமி ருகேவை எதிர்கொண்டார். எதிராளியை அடக்குவதில் தடுமாறிய சாக்ஷி மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடையவேண்டியதாயிற்று. மற்ற இந்திய வீராங்கனைகள் வினேஷ் போகத் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), குர்ஷரன் பிரீத் கவுர் (72 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை வென்றனர். மொத்தத்தில் 3 தங்கம் உள்பட 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ள இந்திய பெண்கள் அணிக்கு ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இதுவே சிறந்த செயல்பாடாக பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து