மலேசிய பிரதமர் ராஜினாமா

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      உலகம்
Malaysian PM resigns 2020 02 24

கோலாலம்பூர் : மலேசிய பிரதமர் மகாதீர் முகமது நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

94 வயதான மகாதீர் முகமது 2018-ம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கு வசதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து