தாஜ்மகாலை சுற்றி பார்த்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - 3 ஆயிரம் கலைஞர்கள் வரவேற்பு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
trump visit tajmahal 2020 02 24

ஆக்ரா : இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். அவருக்கு 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் நேற்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் வரவேற்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கிரிக்கெட் மைதானத்துக்கு டிரம்ப் காரில் சென்றார்.  இதனைத் தொடர்ந்து வழியில் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் சென்றார். ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். . பின்னர், மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். பின்னர் டிரம்பும், மெலனியாவும் அகமதாபாத்தில் இருந்து தாஜ்மகாலை சுற்றி பார்ப்பதற்காக ஆக்ரா சென்றனர். ஆக்ரா விமான நிலையம் வந்தடைந்த அவர்களை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 3 ஆயிரம் கலைஞர்கள் திரண்டு இசை இசைத்து, நடனமாடி டிரம்பை வரவேற்றனர். பின்னர் டிரம்பும், மெலானியாவும் தாஜ்மகாலுக்கு சென்று பார்வையிட்டனர். அங்குள்ள வருகைப்பதிவு புத்தகத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து