முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மானிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டசபை மீண்டும் மார்ச் 9-ம் தேதி கூடுகிறது

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக சட்டசபை மார்ச் 9-ம் தேதி மீண்டும் கூடுகிறது. முன்பண மானியக் கோரிக்கை, துறை வாரியான மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் ஆகியவற்றுக்காக தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக ௧டந்த 14-ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கியது. அன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17-ம் தேதி துவங்கி 20-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார்.

இந்த நிலையில் சட்டசபை செயலாளர் சி. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக சட்டமன்ற அடுத்த கூட்டத்தை மார்ச் மாதம் 9-ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் சபாநாயகர் கூட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார். அரசின் செலவுகளுக்கான முன்பண மானியக் கோரிக்கை, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றுக்காக கூட்டப்படுகிறது. 9-ம் தேதி அன்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும், அந்தக் கூட்டத்தில் சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டசபை கூட்டம் 20 நாள்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனிடையே, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, அவை உரிமை மீறல் குழு, அலுவல் ஆய்வுக் குழு, விதிகள் குழு, உறுதிமொழிக் குழு, பேரவைக் குழு, மனுக்கள் குழு போன்ற பேரவை நிலைக் குழுக்களின் பதவிக் காலம் மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவர். இதற்கான நடவடிக்கைகளும் சட்டசபை கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து