முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தாக்கம்: சுப்ரீம் கோர்ட் வளாகத்தை சீல் வைக்க முடிவு

திங்கட்கிழமை, 23 மார்ச் 2020      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லியில் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில் வழக்கறிஞர்களின் அறைகள் உள்பட சுப்ரீம் கோர்ட் வளாகத்தை சீல் வைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி ஆலோசித்து வருகிறார்.

கொடிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 15ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415 - ஆக அதிகரித்து, பலி எண்ணிக்கையும் 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா பீதி அதிகரித்துள்ள நிலையில் வழக்கறிஞர்களின் அறைகள் உள்பட சுப்ரீம் கோர்ட் வளாகத்தை சீல் வைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ஆலோசித்து வருகிறார். சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அதிகமான நடமாட்டத்தை தவிர்க்கும் வகையில் இன்று மாலைக்குள் வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைப்பது, வழக்கறிஞர்களுக்கு நுழைவு அனுமதி அடையாள அட்டைகளை தற்காலிகமாக ரத்து செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மேலும், இனி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர வழக்குகளை மட்டுமே வீடியோ கான்பிரன்சிங் முறையில் விசாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கோர்ட்டின் வழக்கமான கோடை விடுமுறையை இந்த ஆண்டு முன்கூட்டியே அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து