எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.
அதன்படி, வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கிளைகளை மூடி வைக்கலாம் என்று இந்திய வங்கிகள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்வதை தவிர்க்கவும், டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டது.
- ஸ்டேட் பாங்க், வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- கனரா வங்கி, வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி,வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)
- எச்.டி.எஃ.ப்.சி. வங்கி,வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)
- ஆக்ஸிஸ் வங்கி, வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- பஞ்சாப் நேஷனல் வங்கி,வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
- கோடக் மகிந்திரா வங்கி,வேலை நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (மார்ச் 31ம் தேதி வரை)
- பரோடா வங்கி, வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025