தங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்தது

புதன்கிழமை, 25 மார்ச் 2020      வர்த்தகம்
Gold Rate 2020 03 17

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு அதிரடியாக 512 ரூபாய் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்கான விற்பனை முடங்கியுள்ள இச்சூழலில் தங்கம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பொதுவாக, மக்களிடையே தங்கத்துக்கான தேவை குறையும் போது விலை குறைவது வழக்கம். ஆனால் இப்போது தங்கம் விலை உயர்ந்திருப்பது அசாதாரணமாக இருக்கிறது.

சென்னையில் நேற்று  (மார்ச் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,016 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 3,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 64 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று முன்தினம் 31,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் நேற்று  512 ரூபாய் உயர்ந்து 32,128 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 40.50 ஆகவே இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து