பிரதமர் மற்றும் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிய கோலி - அனுஷ்கா தம்பதி

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      விளையாட்டு
SPORTS-2 2020 03 31

Source: provided

மும்பை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு குறிப்பிடத்தகுந்த தொகையை விராட் கோலி, அனுஷ்கா சர்மா வழங்கியுள்ளனர். 

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் பிரதமர் மற்றும் மராட்டிய முதல்-மந்திரி ஆகியோரது பொது நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட தொகையை தானும், அனுஷ்காவும் வழங்கியுள்ளதாக கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதால் தாங்கள் எவ்வளவு தொகை வழங்கினோம் என்ற விவரத்தை கோலி வெளியிடவில்லை. இதேபோல் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மாநிலங்களவை எம்.பி.க்கான தனது ஒரு மாத சம்பளத்தை (ரூ.1 லட்சம்) வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகர் தன் பங்குக்கு ரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளார். இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) ஊழியர்கள் தங்கள் 3 நாள் சம்பளமான ரூ.76 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து