முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் எவ்வளவு பேர் பலியாக வாய்ப்பு?: வெள்ளை மாளிகை தகவல்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்தில் இருந்து 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடும் என வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஏறத்தாழ 25 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிற போதும், கொரோனா வைரஸ் பரவுவது அங்கு கட்டுக்குள் இல்லாத நிலை நீடிக்கிறது. பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தகவல் மையத்தின் புள்ளி விவரப்படி, அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 89 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை 4,100-ஐ எட்டுகிறது.

அமெரிக்க மாகாணங்களில் நியூயார்க்கில்தான் அதிகபட்சமாக 75 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. அங்கு 1,700 பேருக்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு பலியாகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயால் மொத்த பலி எண்ணிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பது குறித்து வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. நிபுணர்கள் கணிப்புபடி குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளது. நிலைமை மிக மோசமாகிற போது 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான் வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலாக இருக்கிறது. அதாவது தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் எடுத்து வருகிற முயற்சிகள் பலன் அளிக்கிறபோது பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிற போது பலி எண்ணிக்கை 15 லட்சத்தில் இருந்து 22 லட்சம் வரை போகலாம்.கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வரும் 15-ம் தேதி ஒரே நாளில் உச்ச அளவாக 2,214 பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கணித்துள்ளனர். அதன் பின்னர் இறப்புவீதம் குறைந்து விடுமாம். ஜூன் 1-ம் தேதிக்குள் தினமும் இறப்புவீதம் 250 ஆக இருக்கும். ஜூலை 1-ம் தேதி வாக்கில் இது தினந்தோறும் 100-க்கு கீழே வந்து விடும் என்று அதிகாரிகள் கணித்திருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து