Idhayam Matrimony

கொரோனா பாதிப்பால் வங்கிக் கடன்களுக்கு 3 மாத கால வட்டியையும் தள்ளுபடி செய்ய சோனியா காந்தி கோரிக்கை

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      அரசியல்
Image Unavailable

வங்கிக் கடன்களுக்கு 3 மாத கால தவணைஅவகாசம் அளித்ததை போல அந்த காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்யவேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸ்  பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா எதிரொலி குறித்து டெல்லியில் காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தை சோனியா காந்தி நடத்தி நடத்தினார். உலகம் முழுவதும் எதிர்பார்த்திராத மோசமான விளைவுகளை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் நமது சகோதரத்துவத்தை, ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்கிறது.

இந்த வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள் தான். இதுபோன்ற சமயத்தில் அவர்களுக்கு நாம் கைகொடுக்க வேண்டும். தேசிய அளவிலான 21 நாட்கள் ஊரடங்கு என்பது தேவையான ஒன்று. அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பின் வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும் வட்டி தள்ளுபடி இல்லை என்றால் இந்த 3 மாத தவணை அவகாசம் அளிக்கப்பட்டதற்கு எந்த மக்களுக்கும் எந்த பயனும் கிடைக்காது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். சம்பளம் கட், வேலையிழப்பு உள்ளிட்டவற்றால் நடுத்தர மக்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து