முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.2,800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : கொரோனாவால் போட்டிகள் நடத்த முடியாமல் போனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து விளையாட்டு உலகமும் தப்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. இங்கிலாந்திலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உள்ளது. இங்கிலாந்தில் பிரபலமான கவுன்ட்டி கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 12-ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. அது மே 28 - ந்தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் 7 சுற்றுகளை இழக்க வேண்டிஉள்ளது. தற்போதைய நிலைமையை பார்த்தால் இந்த ஆண்டுக்கான கவுன்ட்டி போட்டி ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புள்ளது. இலங்கைக்கு சென்றிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி கொரோனா பீதியால் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அங்கிருந்து தாயகம் திரும்பி விட்டது.

ஜூன் 4- ந்தேதி உள்ளூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியும் தொடங்க சாத்தியமில்லை. நிதியின்றி தவிக்கும் கவுன்ட்டி மற்றும் கிளப் அணிகளுக்கு உதவிட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ.580 கோடி ஒதுக்கியுள்ளது. மற்றொரு பக்கம் சிக்கன நடவடிக்கையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை அடுத்த 3 மாதங்களுக்கு 25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.

நடப்பு சீசனில் கவுண்டி மற்றும் சர்வதேசம் உள்ளிட்ட எந்த போட்டியையும் இங்கிலாந்தில் நடத்த முடியாத நிலை நீடித்தால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படக்கூடும். அதே சமயம் தற்போது பாதுகாப்புதான் முதலில் முக்கியம். கிரிக்கெட் எல்லாம் 2-ம் பட்சம்தான். இதேபோல் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களின் சம்பளத்திலும் கைவைக்க திட்டமிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து