முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது என்பதை இந்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள். இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆகியோரின் பணியினை நான் மனதார பாராட்டுகிறேன்.  அவர்களது பணி மெச்சத்தக்கது.

சென்னை, மைலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில், காவலராக பணிபுரிந்து வந்த அருண்காந்தி,  8.4.2020 அன்று பட்டினப்பாக்கம், தெற்கு கால்வாய் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். அருண்காந்தியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அருண்காந்தியின் குடும்பத்திற்கு சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.   உயிரிழந்த அருண்காந்தியின் குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், தன்னலம் கருதாமல் கொரோனா நோய் தொற்று தடுப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆகியோர் எவரேனும் பணியில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10லட்சம் ரூபாய் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து