எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹாங்காங் : அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் கொரோனா விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருவதால் ஜி-20 காணொலி காட்சி வழி மாநாடு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அந்த அமைப்புக்கான நிதி உதவியையும் நிறுத்தியது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி-20 நாடுகளின் தலைவர்களின் காணொலி காட்சி வழி மாநாட்டுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பையும், சீன அதிபர் ஜின்பிங்கையும் இதில் கலந்து கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் கொரோனா விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருவதால் இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டு விட்டது. இதை ஹாங்காங்கில் இருந்து வெளிவருகிற சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


