முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு ஓ.சி.ஐ. கார்டு வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அனுமதி

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை தளர்த்தியது. இந்நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (ஓ.சி.ஐ) வைத்திருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப அனுமதிக்கும் வகையில் பயணக் கட்டுப்பாடுகளில் மத்திய உள்துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது.அதன்படி, ஓ.சி.ஐ. அட்டை வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் (மைனர்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓ.சி.ஐ. அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகள் அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்ப அனுமதி அளிக்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் இறப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக இந்தியாவிற்கு வர அனுமதி அளிக்கப்படும்.

தம்பதியரில் ஒருவர் இந்தியராக இருந்து, மற்றொருவர் ஓ.சி.ஐ. கார்டு வைத்திருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி அளிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் படிக்கும் மணவர்களின் பெற்றோர் இந்தியாவில் இருந்தால், நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து