முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து :குழப்பத்தால் பயணிகள் கடும் அவதி

திங்கட்கிழமை, 25 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், பல்வேறு குழப்பங்கள் நிலவியதால் டெல்லி விமான நிலையத்தில் 80 - க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

நாடு தழுவிய பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர். விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டது. இதனால் குழப்பம் நிலவியது. 

இந்நிலையில் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த 82 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். கடைசி நிமிடம் வரை தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து