முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சானியா மிர்சா

திங்கட்கிழமை, 25 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஐதரபாத் : இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜானையொட்டி தனது ரசிகர்களுக்கு சானியா மிர்சா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேவேளையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ரம்ஜான் பண்டிகையை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதையும் சானியா மிர்சா தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இது குறித்து சானியா மிர்சா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

இந்த ரம்ஜான் பண்டிகையில் எனது அன்புக்கு உரியவர்களுக்காக நான் எனது வீட்டிலேயே இருக்கிறேன். நீங்களும் இதையே பின்பற்றுங்கள். ரம்ஜான் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். தனது மகன் இஷானுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து