முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடையில் வழங்கிய அரிசி குறித்து பெண் புகார்: டூவீலரில் சென்று நடவடிக்கை எடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ

திங்கட்கிழமை, 1 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை பெத்தானியபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக வந்த புகாரின் பேரில் கடைக்கு நேரில் சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ நடவடிக்கை எடுத்தார். 

மதுரை மாவட்டம் பெத்தானியபுரத்தில் நலத்திட்ட உதவிகள் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அப்போது, அமைச்சரிடம் ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். உடனே அமைச்சர் செல்லூர் ராஜூ இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரேசன் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வில் அரிசி குறைவாக வழங்கியது தொடர்பாக கடையில் இருந்த பெரியசாமி என்பவரை கைது செய்யவும், மேலும் விற்பனையாளர் தாமோதரனை பணியிடை நீக்கம் செய்தும் அமைச்சர் செல்லூர் ராஜூ நடவடிக்கை மேற்கொண்டார். 

அந்தக் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சரின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து