எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விசா பிரச்சினை எதுவும் இருக்காது என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2021-ம் ஆண்டிலும், ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டிலும் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ‘யூடியூப்‘ சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் நடைபெற இருக்கும் இரண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்க விசா பெறுவதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று இந்திய அரசிடம் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை பெற்று தர வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
ஏனெனில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க 2 பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்து இருந்தது‘ என்று தெரிவித்து இருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த நிபந்தனைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது என்று ஐ.சி.சி. விதிமுறையில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த விதிமுறை கிரிக்கெட் வாரியங்களுக்கும் பொருந்தும். எனவே கிரிக்கெட் வாரியங்கள் அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது. ஐ.சி.சி.யில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நலனுக்கு எதிராக செயல்படும் தனிப்பட்ட சிலரின் ஏஜெண்டாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்படுவதை உணர்ந்து கொள்வதுடன், அதனை நிறுத்தி கொள்வதற்கும் இது சரியான தருணமாகும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் சட்டத்துக்கு புறம்பான ஊடுருவல் எதுவும் இருக்காது என்றோ அல்லது போர் நிறுத்த மீறல் எதுவும் நடக்காது என்றோ? அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய மண்ணில் எந்தவித பயங்கரவாத செயலும் அரங்கேற்றப்படாது என்றோ? அல்லது புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் பெற்று பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் கொடுக்குமா? என்றார்.
எல்லையில் நிலவும் பிரச்சினை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் இடையே சுமூக உறவு இல்லை என்பதால் 2012-ம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டு அணிகள் இடையே நேரடி கிரிக்கெட் போட்டி தொடர் எதுவும் நடைபெறவில்லை. ஐ.சி.சி. போட்டிகளில் மட்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


