மேலும் 3949 பேருக்கு கொரோனா: இதுவரை 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை

திங்கட்கிழமை, 29 ஜூன் 2020      தமிழகம்
Radhakrishnan 2020 06 29

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 3949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 86,224-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் இன்று 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 3949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதார துறை கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2,212 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1141- ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,167 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 55,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 90 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 37,331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை 11,40,441 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.37 சதவீதமாக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,039 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 3949 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 53,124 ஆண்கள், 33,079 பெண்கள், 21 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து