பரமக்குடி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
sathan-prabhakar 2020 07 02

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அதன் வேகம் அதிகரித்துள்ளது. சென்னையில் வேகமாக பரவிய கொரோனா தொற்று, தற்போது மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் வேகமெடுத்துள்ளது.  இந்த நிலையில், பரமக்குடி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ சதன் பிரபாகரனின் மனைவி மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ சதன் பிரபாகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து