எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்தியா - சீன எல்லையான லடாக்கின் லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களிடையே கடந்த 15-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு, காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதற்கிடையே, மோதல் நடந்த பகுதியில் இந்திய பிரதமர் மோடி நேற்று திடீரென ஆய்வு செய்தார்.
லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் சென்றிருந்தார். அதன்பின், நிம்முவில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதை தொடர்ந்து லே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். சீனாவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |