முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 3 லட்சத்தில் தங்க முகக்கவசம் அணிந்த மராட்டிய செல்வந்தர்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மராட்டியத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவர் ரூ. 3 லட்சம் மதிப்புடைய தங்க முகக்கவசம் அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மக்கள்  என்.95 மாஸ்க்குகள், துணியால் ஆன மாஸ்குகளை அணிவதை நாம்  பரவலாக காண முடிகிறது. ஆனால், மராட்டியத்தை  சேர்ந்த செல்வந்தர் ஒருவர் தங்க முகக் கவசம் அணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் அடுத்த பிம்பிரி பகுதியில் வசிக்கும் செல்வந்தர் சங்கர் குராடே,  கை, கழுத்து, விரல்களில் கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்துள்ளார். அதே பாணியில், முகக் கவசத்தையும் தங்கத்தில் அணிந்துள்ள அவர், சுவாசத்துக்கு இடையூறாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

நுண்ணிய துளைகள் உள்ளதாகவும் கூறும் அவர், அந்த முகக் கவசத்தின் மதிப்பு 2 லட்சத்து 89 ஆயிரம் என்கிறார். அதாவது உலகின் மிக விலை உயர்ந்த முகக் கவசம் இது என்றே கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து