முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.சி.ஏ. படிப்பு 3 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைப்பு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எம்.சி.ஏ. முதுகலை படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. 

எம்.சி.ஏ. முதுகலை படிப்பு (PG) தற்போது மூன்று ஆண்டுகளாக இருந்து வருகிறது. 2020-2021-ம் கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது. பல்கலைக் கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எம்.சி.ஏ. படிக்க பி.சி.ஏ, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்க வேண்டும். பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ., படித்தவர்கள் 12-ம் வகுப்பில் கட்டாயம் கணிதம் பாட எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து