எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆயுதப்படை காவலர் நாகராஜன் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் விரைவில் பூரண நலம் பெற்று இயல்புநிலை திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று டுவிட்டர் பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் நாகராஜன் (32). இவர் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். சென்னை பாரிமுனையில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நாகராஜன் கொரோனா பரிசோதனை செய்தார்.
அப்போது பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 4-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏற்கெனவே சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் 3-வது காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆயுதப்படை பிரிவில் முதல் உயிரிழப்பு என்பது இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025