ஐந்து நிமிடத்திற்குள் 3 கோல்: யுவென்டஸ் அணியை வீழ்த்தியது ஏ.சி.மிலன்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      விளையாட்டு
AC Milan 2020 07 08

Source: provided

ரோம் : செரி-ஏ கால்பந்து லீக்கில் 0-2 என பின்தங்கிய நிலையில், ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்து ஏ.சி. மிலன் 4-2 என வெற்றி பெற்றது.

இத்தாலியின் முதன்மை கால்பந்து லீக்கான செரி-ஏ லீக்கில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திற்கான ஆட்டம் தொடங்கியதும் 47-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் ஆட்ரியன் ரேபியோட் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 6-வது நிமிடத்தில் (ஆட்டத்தின் 53-வது நிமிடம்) நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவென்ஸ் 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.

அதன்பின் ஏ.சி.மிலன் அணி வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 62-வது நமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இப்ராஹிமோவிச் அதை கோலாக்கினார்.

அதன்பின் 66-வது நிமிடத்தில் பிரான்ங் கெஸ்சி கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ரபேல் லியோ கோல் அடித்தார். ஐந்து நிமிடத்திற்குள் மூன்று கோல்கள் அடித்ததால் 3-2 என ஏ.சி. மிலன் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 80-வது நிமிடத்தில் ஆன்டே ரெபிக் மேலும் ஒரு கோல் அடிக்க ஏ.சி. மிலன் 4-2 என வெற்றி பெற்றது

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து