முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் ரூ.100 கோடி தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண் அதிகாரி பணிநீக்கம்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

கேரளாவில் ரூ.100 கோடி தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.  அப்போது மணப்பாடில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்த சரித் குமார் என்பவருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருப்பதும், மேலும் அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு சரித் குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

அதன்பிறகு, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை மறைத்து, தான் தொடர்ந்து பணிபுரிவதாக தெரிவித்ததாகவும், அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து அடிக்கடி தூதரகத்துக்கு பார்சல்கள் வந்தன. அந்த பார்சல்கள் சோதனை செய்யப்படாததை, சரித் குமார், தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தங்கத்தை பல முறை கடத்தியதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சரித் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் என்பவர் மூளையாக செயல்பட்டதும், இவர்கள் இருவரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் எனவும் அதிகாரிகள் கருதுகிறார்கள். மேலும் ஸ்வப்னா சுரே‌‌ஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் செயலாக்க மேலாளராக பணியாற்றி வந்தார். சரித் குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரையும் பணி நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு ஸ்வப்னா சுரே‌‌ஷ் தலைமறைவாகி விட்டார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் அதிகாரிகள் 6 மணி நேரம் சோதனை நடத்தி, லேப்-டாப் போன்றவற்றை கைப்பற்றினர். மேலும் சில அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும், அவர்களும் சிக்குகிறார்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து