முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று

சனிக்கிழமை, 11 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.  நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  8,20,916-ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,114 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில்  பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  அதேபோல், கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 519 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,123- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,15,386- ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,83,407 - ஆக உள்ளது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து