முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை : தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் கே.ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தது. பரிசோதனை முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும்  105 பரிசோதனை மையங்களை  ஏற்படுத்தி, நேற்று முன்தினம் வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக, முதல்வருக்கும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து