முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் நூறு பிராமணர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இணை நோயாளிகள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை - எண்ணூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை பெருநகர மநாகராட்சி மூலம் திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அந்த பகுதி மக்களுக்கு இணை நோயாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.  எண்ணூரில் நேற்று  காமராஜர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணை நோயாளிகள் மருத்தவ சிறப்பு பரிசோதனை முகாமில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜானிடாம்வர்கீஸ், மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்;.ஏ.,கே.குப்பன், மண்டல அலுவலர் பால்தங்கதுரை, டிஸ்பி.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பார்வையிட்டார்.  

பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், யூரியா, இருதய நோய், ஆக்ஸிஜன் சொரிவு, யூரியா கிரியேட்டின், கருப்பை மற்றும் வாய்ப்புற்று நோய் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதுவரை 15,724 பேர் இணை நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனை மூலம் இணை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படின் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து நலம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு முகாம் மூலம் கொரோனா தொற்று கண்டறியப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த சிறப்பு முகாமிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

கடந்த ஒரு வாரமாக சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று எண்ணிக்கை குறைவாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்கனை காட்டிலும் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  முதல்வர் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டு அவர்களின் ஆலோசனைகளோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் காய்ச்சல் முகாம் போன்று இணை நோய் சிறப்பு மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மண்டலம் சுமார் 3.50 லட்சம் மக்கள் தொகை கொண்டது.

இங்கு உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைத்து இணை நோய் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  பொது ஊரடங்கின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.

ஜூலை 31 வரை பொதுபோக்குவரத்து தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரம் வாழ தகுதி இல்லாத நகரம் என்று கூறப்பட்ட நிலையில் இப்பொழுது முதல்வர் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான வீடுவீடாக சென்று காய்ச்சல், ஆக்ஸிஜன் பரிசோதனை போன்றவற்றால் தொற்று ஆரம்ப நிலையிலே கண்டறிந்து குணமாக்கப்படுகிறது. 

தற்போது உள்ள ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தனது அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம். தொழிலாளர்கள் தங்கள் ஊரிலிருந்து தாங்கள் வேலைபார்க்கும் தொழிற்சாலைக்கு பணிக்கும் செல்லும் இ-பாஸ் தொடர்பான பிரச்சினைக்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முடிவில் திருவொற்றியூர் சங்கராச்சாரியார் காலனியில் உள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் புரோகிதர்கள், ஏழை எளிய பிராமண சமூதாயத்தை சார்ந்த 100 குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் ஏற்பாட்டில் தலா ஐந்து கிலோ அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., தலைமையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

அருகில் அதிமுக நிர்வாகிகள் கே.கார்த்திக், இ.வேலாயுதம், ஜி.ரவிக்குமார், புதுகை பாண்டியன், எஸ்.சங்கர், எஸ்.மா.அரசு, எம்.கண்ணன், தேரடி பரமசிவம், டி.ஸ்டீபன்ராஜ், விம்கோலெனின், எஸ்.பி.புகழேந்தி, எம்.தினகரன், பிராமண சங்கத்தலைவர் ஜெயராமன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து