முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்றுமுதல் இலவச முகக்கவசம் வினியோகம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் குடும்ப அட்டை தாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருக்குமாறு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமாக குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒருவருக்கும் தலா 2 முகக்கவசம் வீதம் கட்டணமின்றி வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 7 கோடி பேருக்கு தலா 2 முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்த திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. 

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்ரமணியம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில், கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முககவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

இதில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தவிர இதர நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படும்.

இதுகுறித்து ரேஷன் கடைகளில் உள்ள விற்பனை முனையக் கருவிகளில் (பி.ஓ.எஸ்.) உரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் அட்டைதாரர்களுக்கு முககவசங்கள் வழங்கப்படுவது குறித்து, அவரவர் மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்படும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும்போது முககவசங்கள் தொடர்பாகவும் பி.ஓ.எஸ். எந்திரத்தில் உரிய பதிவுகள் செய்தே வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து