எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் வரும் 10.08.2020-க்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பிக்குமாறு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அ.தி.மு.க. சட்ட விதிமுறைகளின்படி கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான நிறைவு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்காக, அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழகத்தில் இருந்து பெற்று சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் வரும் 10.08.2020-க்குள் தலைமை கழகத்தில் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எக்காரணத்தை கொண்டும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.
ஆகவே மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உடன் பிறப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு உரிய காலத்திற்குள் இப்பணியினை செய்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள உடன்பிறப்புகள் மட்டுமே நடைபெறவுள்ள கழக அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


