விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
Kerala crash 2020 07 29

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது.

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது.

அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்தனர்.  விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது.  விமானிகளுக்கு  இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் ஏதும் கோளாறு ஏற்பட்டிருந்ததா என்பது கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளின் அடிப்படையில் தெரிய வரும். விபத்துக்கு முன்பு பதிவான அனைத்து தரவுகளை கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருக்கும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து