கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வந்த தகவல் தவறானது : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Vijayabaskar 2020 07 31

Source: provided

சென்னை : தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சுகாதார துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை இந்தியளவில் 2 மில்லியனை கடந்தது. தினந்தோறும் அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. இருப்பினும், தொற்றுக்கு எதிராக முன்களத்தில் நின்று மருத்துவப் பணியாளர்கள் சேவையாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. அந்த தகவல் குறித்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது;-

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக

வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனை சிகிச்சைகளில் உள்ளனர்.

மீதம் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து