கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Health Department 2020 07 06

Source: provided

புதுடெல்லி : ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. 

ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின்  அறிவித்துள்ளார். 

மேலும் கொரோனா தடுப்பூசி செப்டம்பர் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அறிவித்துள்ளது.  இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும், இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு இன்று கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து