முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கோப்பையை சி.எஸ்.கே. வெல்ல நல்ல வாய்ப்பு: வாட்சன்

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய், செப் : அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வெல்ல சி.எஸ்.கே. அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக வாட்சன் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) ‘யூடியூப்’ சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,

‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு நெருக்கடியான தருணத்திலும் திறமையை வெளிப்படுத்த முடியும்.

தரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிப்பதால் இந்த ஆண்டு எங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்றும், கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் நம்புகிறோம்.

நாங்கள் அதிக தவறுகள் இழைக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் விரைவில் முடிந்த அளவுக்கு வேகமாக செயல்பட முயற்சிக்க வேண்டியது அவசியமானதாகும்.  

கடந்த 4 வருடங்களாக நான் அவ்வப்போது தான் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு நிறைய புரிதல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திறமையை மேம்படுத்துவது என்பது இன்னும் சவாலானது தான்.

2018-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப்போட்டி (சதம் அடித்தது) மட்டுமின்றி அந்த தொடர் முழுவதும் எனக்கு நன்றாக அமைந்தது. கடந்த ஆண்டில் (2019) சில ஆட்டங்களில் சரியாக ரன்கள் எடுக்காவிட்டாலும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் என்னை தக்கவைத்தது. மற்ற அணிகளாக இருந்தால் நிச்சயம் என்னை நீக்கி இருப்பார்கள் என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து