வாட்ஸ்-அப், பேஸ் புக் தளங்களை கட்டுப்படுத்த தேவையில்லை: ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      இந்தியா
WhatsApp -Facebook 2020 09

Source: provided

புதுடெல்லி : புதிய விதிமுறைகளை உருவாக்கி வாட்ஸ்-அப், பேஸ் புக் தளங்களை கட்டுப்படுத்த தேவையில்லை என்று ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும வகையில் இருந்ததால் சீனாவின் டிக்-டாக் உள்ளிட்ட ஏராளமான செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த நிலையில் வாட்ஸ்- அப், பேஸ் புக், மெசஞ்சர், ஆப்பிள் பேஸ் டைம், கூகுள் சாட், ஸ்கைப் டெலகிராம் போன்ற சமூக தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த தளங்களில் வெறுக்கத்தக்க செய்திகள், அவதூறு தகவல்கள் பரிமாறப்படுவதாகவும், இதனால் அதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

இது சம்பந்தமாக டிராய் அமைப்பு (டெலிபோன் ஒழுங்குமுறை ஆணையம்) ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. அதில், சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு ஏற்கனவே பல விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதுவே இவற்றை கட்டுப்படுத்துவதற்கு போது மானதாக உள்ளது.இதனால் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு செய்வது அந்த தளங்களின் பணிகளுக்கு இடையூறு செய்வதாக அமையும். சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகபட்ச தலையீடுகளை செய்ய முடியாது. எனவே, இவற்றை கட்டுப்படுத்த புதிய விதி முறைகள் தேவை இல்லை என்று டிராய் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து