முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும்: டிரம்ப்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று முன்தினம் 2 லட்சத்தை கடந்துள்ளது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் அதிபர் டிரம்ப் கூறும் போது, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அக்டோபர் மாதத்தில் வந்து விடும் என்று தெரிவித்தார். நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசியை கொண்டு வந்து விடவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒரு மாதத்தில் தயாராகி விடும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் தடுப்பூசியை போடுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தடுப்பூசி தயாராகி விடும். நீங்கள் உண்மையை அறிய விரும்பினால் முந்தைய நிர்வாகம் தடுப்பூசிக்கு ஒப்புதல்களை பெற பல ஆண்டுகளை எடுத்திருக்கும்.  ஆனால் அந்த ஒப்புதலை நாங்கள் சில வாரங்களிலேயே பெற்றோம்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து