முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்: திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.பி.எல். அணிகளுக்கு இந்திய பயிற்சியாளர்களையே  நியமிக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார்  வலியுறுத்தியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் 13-வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிக வீரர்களும் அபுதாபி, துபாய், ஷார்ஜா நகரங்களில்  முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த 8 அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மட்டுமே இந்தியாவை சேர்ந்த முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக  உள்ளார். மற்ற 7 அணிகளுக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே தலைமை பயிற்சியாளர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் வளைகுடா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான வெங்சர்க்கார் கூறியதாவது:-

 ஐ.பி.எல். அணிகளுக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்களே தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மற்ற உதவி பயிற்சியாளர்கள் பணிகளில் கூட இந்தியர்கள் இல்லை. 

இந்தியாவில் திறமையான பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அனுபவமும், கூடுதல் ஆற்றலும் உள்ளவர்கள் என்பதை பலமுறை நிரூபித்து உள்ளனர்.

எனவே ஐ.பி.எல். அணிகள் இந்தியாவை சேர்ந்தவர்களை தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் பிக்பாஷ், சி.பி.எல். போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும் ஒரு அணிக்கு கூட இந்திய பயிற்சியாளர் கிடையாது. நாம் மட்டும் ஏன் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.   

ஒரே ஒரு இந்தியர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல. இந்திய பயிற்சியாளர்களை அதிகம் நியமிக்க வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணம்.

ஐபிஎல் அணி நிர்வாகங்கள்  வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு பதில் உள்நாட்டு பயிற்சியாளர்களை அதிகம் நியமிக்க வேண்டும். அதை அவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து