எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் ‘பரிவா்த்தன் யாத்திரை’யின் நிறைவுப் பொதுக்கூட்டம் இன்று (மாா்ச் 14-ம் தேதி) நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசுகிறாா். அதற்கு மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாளில், அதாவது மாா்ச் 15 அல்லது 16-ம் தேதி மேற்கு வங்கம், தமிழகம், கேரளம், புதுச்சேரி, கோவா ஆகியவற்றின் சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அவை மேலும் கூறியதாவது: மேற்கு வங்க சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 7, தமிழகத்துக்கு மே 10, புதுச்சேரிக்கு ஜூன் 15, அஸ்ஸாமுக்கு மே 20, கேரளத்துக்கு மே 23 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது. எனவே, இவற்றுக்கு வரும் மே மாதத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்தும் சாத்தியம் குறித்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தலைமைத் தோ்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
‘மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவை நடத்தினால், தோ்தல் தொடா்பான வன்முறைகளை கட்டுப்படுத்த உதவும்; இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் முன்பு, இந்தக் காரணியும் கருத்தில் கொள்ளப்படும்’ என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திலோ நடைபெறக்கூடும். இவற்றைக் கருத்தில்கொண்டு மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கும் தோ்தல் தேதிகளை தோ்தல் ஆணையம் ஒரே நாளில் அறிவிக்கக்கூடும். தமிழகம் மற்றம் புதுச்சேரிக்கு முந்தைய வழக்கத்தின்படி ஒரே கட்டமாகவே தோ்தல் நடத்தப்படும் என ஆணைய வட்டாரங்கள் கூறின.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


