கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங். எம்.பி. சென்னையில் உயிரிழப்பு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Durga-Prasad-Rao 2020 09 16

Source: provided

சென்னை : சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.

திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் துர்கா பிரசாத் ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.

இவரது மறைவு ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து