முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ரோம் : 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அவரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகா ஸ்வாட்ஸ்மன் வீழ்த்தினார். நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ருட்டை (நார்வே) வெளியேற்றி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து