பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      தமிழகம்
PERARIVALAN 2020 09 24

ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று  விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அவர் விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து