முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
Bus 2024-10-21

சென்னை, தீபாவளியை முன்னிட்டு கடந்த  2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு முதல் மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி, கடந்த 3 தினங்களுக்கு முன்பு முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத் துறை, தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று முன்தினம் (17.10.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும்பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பஸ்களும் 1,975 சிறப்புப் பஸ்களும் இயக்கப்பட்டு ஆக கடந்த (16.10.25 முதல் 17.10.25 வரை) நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி வரை 6,920 பேருந்துகளில் 3,59,840 பயணிகள்பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் (சனிக்கிழமை), இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படும் பேருந்துகளில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து