நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      சினிமா
CHENNAI HIGH COURT 2020 09

நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்கப்படாதது குறித்தும் வழக்கு தொடரப்பட்டது.  இந்த சூழலில் வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா? வாக்கு எண்ணிக்கை நடத்துவதா? என்பதை நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர் தரப்பினர் செப்டம்பர் 24-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரும் நீதிமன்ற யோசனையை ஏற்க மறுத்ததால் ஐகோர்ட் இந்த அதிரடி. உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் வேறு அமர்வு விசாரிக்க சென்னை ஐகோர்ட் அமர்வு பரிந்துரை செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து