பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி: விரைவில் குணமடைய துணை முதல்வர் ஓ.பி.எஸ். வேண்டுதல்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      தமிழகம்
Pollachi-Jayaraman 2020 09

Source: provided

சென்னை : தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழுக்கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தற்போது சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் விரைவில் பூரண நலம் பெற்று பொதுப்பணிகளைத் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். 

அதனை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து