Idhayam Matrimony

எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2025      இந்தியா
H-1B-Visa 2025-09-21

Source: provided

புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெறும் எச்1-பி விசாவுக்கான கட்டணத்தை சுமார் ரூ.88 லட்சமாக அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. இது இந்தியாவில் அரசு மற்றும் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘எச்1-பி விசா கட்டண உயர்வு இந்திய குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார். மேலும், இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகள் தகுந்த முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என மத்திய அரசு நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து