முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருமொழி கொள்கையே அ.தி.மு.க.வின் கொள்கை: ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர்ந்திட ஒற்றுமையாக பணியாற்றி உழைப்போம்: செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் இருமொழி கொள்கையே அ.தி.மு.க.வின் கொள்கை என்றும், ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று காலை (28.9.2020 - திங்கட் கிழமை), சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கூட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இந்த கூட்டம் நடைபெற்றது.

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

பொது வாழ்வுப் பணிகளுக்கு இலக்கணமாக, கொரோனா நோய்த் தொற்று காலத்திலும் கண்துஞ்சாது கடமையாற்றி, மக்களின் துயர் துடைக்க அயராது அரும்பணி ஆற்றி வரும் முதல்வர், துணை முதல்வர்,  அமைச்சர்கள் மற்றும் கட்சியின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்வது, 

அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான பணிகளின் விளைவாக கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஏற்று, மத்திய அரசு கொரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழ் நாட்டிற்கு வழங்க வலியுறுத்துவது, 

தமிழ் நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள  ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது,  தாய்மொழி - தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை. 

எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல; எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது - என்ற கருத்தில் கழகம் உறுதியாய் இருக்கும். `நீட்’’ என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது.

மாநிலங்களின் கல்வி உரிமையில் `நீட்’ தேர்வு மூலம்  மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும்,   கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், `நீட்’ தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

`நீட்’’ தேர்வு முறை அமல்படுத்தப்பட காரணமாக இருந்த  மத்திய கூட்டணி அரசில் பங்குபெற்றிருந்த தி.மு.க., இப்பொழுது உண்மைகளை மறைத்து விட்டு ``நீட்’’ தேர்வுகளைக் காட்டி அரசியல் சுயலாபங்களுக்காக  கபட நாடகம் ஆடுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.  

 தமிழ் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக  6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றில் புதிதாக  1400 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை உருவாக்கியும், இப்பொழுது 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்துவரும் ஆண்டுகளில் புதிதாக 1650 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாகவும் வகை செய்திருக்கும்  அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது,

மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்தமைக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது,  காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து, தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும்,   

திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து, காவேரியால் பாசனம் பெறும் அனைத்து விவசாயிகளும் குறுவை சாகுபடி மேற்கொள்ள வழிவகுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்தும், 

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம், புதிய கலை அறிவியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடங்கி உள்ளமைக்கு, அ.தி.மு.க. அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும்,  

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவையும், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும், சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைத்து, ஒட்டுமொத்தமாக 1,022 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்கி வைத்தமைக்கும், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை துவக்க நடவடிக்கை எடுத்தமைக்கும், முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தும், 

இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தென் மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவது,  கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும்,

இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தக் கோரிக்கை விடுப்பது,  கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை என மொத்தம் 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியமைக்கு, தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவித்தும், காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்தும்,  

தமிழ் நாட்டின் ஒப்பற்ற முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும், அம்மா வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் நன்றி தெரிவித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய் பணியாற்றி, தமிழ் நாட்டில் மீண்டும்  எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம், உழைப்போம் என்று சூளுரை ஏற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து