குஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      இந்தியா
Gujarat 2020 09 29

Source: provided

அகமதாபாத் : குஜராத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியாகினர். 

குஜராத் மாநிலம் வதோதராவின் பவமன்புரா பகுதியில் நேற்று அதிகாலை புதிதாக கட்டிக்கொண்டு இருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 10-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன.

தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து