முக்கிய செய்திகள்

தொழில் அதிபரை மணக்கும் நடிகை காஜல் அகர்வால் வரும் 30–ல் திருமணம்

Kajal-Agarwal 2020 10 06

Source: provided

மும்பை : காஜல் அகர்வால் நேற்று தனது திருமண தேதியை வெளியிட்டார். 35 வயதான காஜல் வரும் 30-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மாப்பிள்ளை பெயர் கவுதம் கிட்சுலு என்னும் தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். 

அத்துடன் பல ஆண்டுகள் எனக்கு வழங்கிய அன்பிற்கு நன்றி. இந்த நம்ப முடியாத புதிய பயணத்திற்கு எங்களை ஆசீர்வதியுங்கள். நீங்கள் விரும்புவதை தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளார். 

திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அத்துடன், அதற்காக முக்கிய இடம் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காஜல் அகர்வால் மற்றும் கிட்சுலு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கிட்சுலு தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து